Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

REPENTANCE.

மனந்திரும்புதல்.

மனுஷன் தேவனேடு சரியாவதெப்படி? பாவியானவன் எவ்வாறு நீதிமானாகக்கூடும்? கிறிஸ்து வின் மூலமாய் மாத்திரம் தேவனோடும், அவர் பரிசுத்தத்தோடும் ஜக்கியப்படலாம்: அப்படியானால் கிறிஸ்துவண்டை சேர்வதெப்படி? பெந்தெகொஸ்தே நாளில் திரளாய்க்கூடியிருநத ஜனங்கள “நாங்கள் என்ன செய்யவேண்டும்” என்று கேட்டபிரகாரமே, இக்காலத்திலும் பலர் பாவவுணர்ச்சியடைநது இருதயத்திலே குத்தப்படுகிறபொமுது கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு மாறுத்தரம், அந்நாளிலே பேதுரு அப்போஸ்தலன் கொடுத்தபிரதியுத்தரத்தின் முதல் வார்த்தையாகிய “மனந்திரும்புங்கள்” (அப். 2: 38) என்பது தகுதியானதே. இன்னேர் சமயத்தில், அவர் “உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” (அப். 3: 50) என்று சொல்லுகிறார். SC 30.1

மனந்திரும்புதலாவது, தான் செய்த பாவத்துக்காக மனஸ்தாபப்பட்டு அதினின்று திரும்பிவிடு வதைக் குறிக்கும். நாம் பாவத்தன்மையை உணராதபட்சத்தில், அதை விட்டு விடமாட்டோம். நம்முடைய இருதயம் பாவத்தினின்று திரும்புகிறவரையில், நமது ஜீவியத்தில் மெய்யான மாறுதல் இருக்கவே இராது. SC 30.2

மனந்திரும்புதலின் சரியான வழியை யறியாம லிருக்கிற ஜனங்கள் பலருண்டு. எண்ணிறந்தபேர் தங்கள் தீவினைகளினாலே தங்களுக்குக் கேடுவருமென்றஞ்சி, தாங்கள் செய்த குற்றங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, வெளியரங்கமாய்த் தங்களைச் சீர்ப்படுத்திக்கொள்ளுகிறார்கள். வேதாகமம் போதிக்கிறபடி பார்த்தால், இது மனந்திரும்புதலல்ல. தாங்கள் செய்த பாவத்துக்காகத் துக்கப்படுவதை விட்டு, அதினால் வரும் பாடுகளுக்காகவே புலம்புகிறார்கள். திருஷ்டாந்தமாக, ஏசா தன் ஜேஷ்ட சுதந்தரத்தைத்தான் (என்றென்றைக்கும் அனுபவிக்கக் கூடாதபடி இழந்து) போனதைக் கண்டுதுக்கசாகரத்திலமிழ்ந்தான். பிலேயாம் இஸ்ரவேலரைச் சபிக்கும்படியாகப்போகிறபோது, வழியிலே உருவினபட்டயத்தைக் கையிலேந்தி நிற்கிற தேவ தூதனைக் கண்டு பயந்துநடுங்கினான். தன் ஜீவனை இழந்துபோகாதபடிக்கே தன் குற்றத்தை யொத்துக்கொண்டான். தன் பாவத்தைப்பற்றிய மெய்யான மனந்திரும்புதல் அவனிடத்திலிருந்ததில்லை. தான் முன் கொண்டிந்த எண்ணத்தையும் அவன் மாற்றவில்லை. பாவத்தின் பேரில் அருவருப்பும் அவனுக்கிருக்கவில்லை. SC 31.1

யூதாஸ்காரியோத்து தன்னுடைய கர்த்தரைக் காட்டிக் கொடுத்த கொஞ்சநேரத்துக்குப்பின், “குற்றமில்லாத இரத்த்த்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்” (மத்.27:4) என்று அங்கலாய்த்தான். பயங்கரமான நியாயத் தீர்ப்பையும் கொடிய ஆக்கினையையுமடையவேண்டுமே என்று அவனுடைய குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தபடியாலும், தண்டனையின் அகோரம் பலமாய்க் காணப்பட்டபடியாலுந்தான் தன் பாவத்தை அறிக்கையிட்டான். அவன் பாவத்தினால் அவனுக்கு வந்த பலன் நடுக்கமும் பயமுந்தானே யொழிய வேறல்ல. அவனுடைய உள்ளான இருதயத்திலே இஸ்ரவேலின் பரிசுத்தரை மறுதலித்து, குற்றமற்ற தேவனுடைய குமாரனைக்காட்டிக் கொடுத்தேனே என்கிற மனவேதனையும் நருங்குண்ட இருதயமும் அவனுக்கிருந்ததேயில்லை. பார்வோன் தேவனால் வாதிக்கப்படுகையில் தண்டனையின்மேல் தண்டனையடையாதபடி தப்பித்துக் கொள்வதற்காகவே தன் பாவத்தை ஒத்துக்கொண்டான்; வாதைகள் நின்றபோதோ வானவரோடு எதிர்த்து நின்றான். மேலே கூறிய பாவ அறிக்கை யாவும் பாவத்தின் பலனாகிய தண்டனைக்குப் பயந்ததே யொழிய பாவத்துக்காக வுண்டான சரியான துக்கமல்ல. SC 32.1