Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

பொருளடக்கம்

முன்னுரை

ஏழாம்நாள் அட்வெந்து இயக்கம் தென் ஆசியப் பகுதியில் வளர்ந்து வருகின்றது. அவ்வியக்கத்தின் அங்கத்தினர் பேசும் மொழிகள் பல. அவர்களுக்கு சாட்சி ஆகமம் தாங்கள் பேசும் பொழிகளில் கிடைக்க வேண்டும் என்ற அவா நெடுநாளாக இருந்து வருகின்றது: உலகம் எங்கும் உள்ள சபைகளுக்கு ஆசீர்வாதமும், அவைகளை ஊன்றக் கட்டுவதற்கு முக்கிய கருவியுமாக இருந்த இந்நூல், தங்கள் மொழியிலும் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது இயல்பே. ஒன்பது தொகுதிகளையும் ஒவ்வொரு மொழியிலும் வெளியிடுவது எளிதான காரியம் அல்ல. சாட்சியாகமம் தவிர, தீர்க்கதரிசன ஆவியின் நூல்கள் வேறு பல உள. அவை எல்லாவற்றினின்றும் பல நல்ல ஆலோசனைகளைத் தெரிந்தெடுத்து இந்நூலில் வெளியிடுகின்றோம். சபை வளர்ச்சிக்கு இந்நூல் மிக அனுகூலமாக இருக்கும் என்பதற்கு ஐயம் இல்லை. CCh 9.1

இந்நூலின் ஆலோசனைகள் தென் ஆசியப் பகுதிச் செயற்குழு உறுப்பினரும், வாஷிங்டன் தலைமைக் காரியாலயத்திலுள்ள எலன் ஜி. உவைட் அம்மையார் வெளியீடுகளின் பொறுப்பாளரும் சேர்ந்து தெரிந்தெடுத்தவை. அவைகள் அறுபத்தாறு அதிகாரங்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. CCh 9.2

உவைட் அம்மையாரின் நூல்களிலிருந்து பல பொருட்கள் உள்ளிட்ட பகுதிகளை, மிகுந்த சிரமத்துடன் தெரிதெடுத்து, ஒழுங்குபடுத்தி, மொழி பெயர்த்து, ஒரே நூலாக வெளியிட்டுள்ளோம். எல்லா விஷயங்களையும் இதில் கொண்டுவர இயலாமற் போனாலும், முக்கிய பொருட்களைத் தெரிந்தெடுத்து அவசியமான ஆலோசனைகளைச் சேர்த்திருக்கிறோம். இதில் சுருக்கமான பலவிஷயங்கள் அடங்கியுள்ளன. அவை எந்தெந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டன என்பது ஒவ்வொரு அத்தியாத்தின் இறுதியிலும் காட்டப்பட்டுள்ளது. அங்ஙனம் தெரிந்தெடுக்கப்பட்டவைகளில் விடப்பட்ட வரிகளோ பத்திகளோ எவை எனக்குறிப்பிடவில்லை. CCh 9.3

1955-இல் பூனாவில் நடந்த செமினரி எக்ஸ்டென்ஷன் பள்ளிக்கு வந்திருந்த ஊழிய பல வேண்டுகோளின்படி உவைட் அம்மையாரின் வரலாற்றுக் குறிப்புக்கள் இந்நூலின் முன்னுரையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இது வாசகர்களுக்கு அம்மையாரைப் பற்றியும், அவர்கள் பெற்றிருந்த தீர்க்கதரிசன வரம்பின் ஆரம்பம் முதல் அவர்கள் மரணம் (1915) வரை எவ்வாறு கிரியை செய்தது என்பதைப் பற்றியும், ஓரளவு தெரிந்து கொள்ள உதவியாகும். முகவுரை அம்மையாரின் நூல்களின் பொருப்பாளருடையது. சபைக்கு ஆலோசனை அம்மையாருடையது. எனவே, அவர்களுடைய வரலாறு அடங்கிய முகவுரையை, ஆலோசனைகளாக மதித்துக் குழப்பம் அடைய வேண்டாம். CCh 10.1

எல்லையில்லா மகிழ்ச்சியோடும், மன ரம்மியத்தோடும் இத்தொகுதிகளுக்காக நெடு நாளாகக் காத்திருந்தவர்களுக்கு இதை வெளியிடுகிறோம். இப்பக்கங்களிலும் அடங்கிய விலையேறப்பட்ட ஆலோசனைகளும், உபதேசங்களிலும், அட்வெந்து தூதுகளில் வாசகர்களை உறுதியடையச் செய்து, அவர்களின் கிறிஸ்துவ அனுபவங்களைப் பெருகச் செய்து, கடைசி நாளில் அவர் வருகையின்போது, வெற்றியடையும் நிச்சயத்தை அவர்கள் உள்ளத்தில் ஓங்கி வளரச் செய்ய வேணுடுமென்பதே எம் ஊக்கமான வேண்டுதல். CCh 10.2

இங்ஙனம் CCh 10.3

தென் ஆசியப் பகுதிச் செயற்குழு உறுப்பினர் CCh 10.4

எலன் ஜி.உவைட் அம்மையாரின் வெளியீடுகளின் CCh 10.5

பொறுப்பாளர் CCh 10.6