Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

கிறிஸ்துவை அறிக்கை செய்தல் அல்லது மறுதலித்தல்

நாம் சமூகத்தினரிடையேயும், குடும்பங்களிலும் கலந்து உறவாடுகையில் அல்லது சிறியதாகவோ, விசாலமான தாகவோ உள்ள வாழ்க்கை உறவுகளில் ஈடுப்பட்டிருக்கையில், நாம் பல வழிகளில் நமது கர்த்தரை அறிக்கையிடவோ மறுதலிக்கவோ செய்யலாம். நாம் அவரை நமது வார்த்தைகளினாலும், பிறரை தீங்கு பேசுவதினாலும், புத்தியீனமான பேச்சுகளினாலும், கேலி பரியாசத்தினாலும், பட்சமற்ற பயனற்ற வார்த்தைகளினாலும், புரட்டுகளினாலும், அசத்தியமானவைகளைப் பேசுவதினாலும் மறுதலிக்கலாம். நம்முடைய வார்த்தைகளால் கிறிஸ்து நம்மில் இல்லை என்று அறிக்கையிடலாம். நாம் இலகுவான வாழ்வை விரும்புவதினாலும், கடமைகளைப் புறக்கணிப்பதினாலும், நாம் சுமக்கா விட்டாலும் பிறர் சுமக்க வேண்டியதாகும் பாரங்களை சுமக்க மறுப்பதாலும், பவ இன்பங்களை நேசிப்பதாலும் அவரை மறுதலிக்கலாம். கர்வமாக உடுத்துவதினாலும், உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிப்பதினாலும், மரியாதை யற்ற நடத்தையினாலும் கிறிஸ்துவை மறுதலிக்கலாம். நமது சுய கருத்துகளை வாஞ்சித்து, தன்னலத்தை சரியெனக் காட்ட வழி பார்பதினாலும் அவரை மறுதலிக்கலாம். மனதை காதற் கனவு கொள்ளும் வழிகளில் செல்ல விடுவதினாலும், துன்பங்களை, நமது கஷ்ட நிலைமையை கற்பனை பண்ணி சிந்திப்பதினாலும் அவரை மறுதலிக்கலாம். CCh 271.1

கிறிஸ்துவின் மனதும், ஆவியும் இல்லாவிட்டால் எவரும் கிறிஸ்துவை உலகத்திற்கு உண்மையாக அறிக்கை பண்ண முடியாது. நம்மிடமில்லாததை பிறருடன் பரிவர்த்தனம் செய்து கொள்ள முடியாது. இருதயத்தின் உள்ளே இருக்கிற கிருபையையும், சத்தியத்தையும் நமது சம்பாஷணையினாலும், நடத்தையினாலும் மெய்யெனக் காட்ட வேண்டும். இருதயம் பரிசுத்தம் பண்ணப்பட்டு, அடக்கமும், தாழ்மையுமுள்ளாகி, கனிகள் வெளிப்படையாய்க் காணப்படுவதானல் இதுவே கிறிஸ்துவைக் காரியார்த்தமாய் அறிக்கை பண்ணுவதாகும்.3T.301, 332. CCh 272.1