Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

ஓய்வுநாள் ஆசரிப்பின் ஆசீர்வாதங்கள்

நான்காம் கற்பனையின் உரிமையை அங்கீகரித்து ஓய்வுநாளை ஆசரிக்கிறவர்களைப் பரலோகம் முழுவதும் அக்கரையுடன் உற்று கவனிப்பதாக எனக்குக் காட்டப்பட்டது. ஓய்வுநாளை மதித்து இத் தெய்வீக நியமத்தை கனம் பண்ணுகிறவர்களின் உற்சாகத்தை தூதர்கள் குறிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார்கள். கட்டுப்பாடுடன் பக்தி பொருந்திய மனதையுடையவார்களாக தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிசுத்தப்படுத்துகிறவர்களூக்கும், ஓய்வுநாளை மன மகிழ்ச்சியின் நாளொன அழைத்துத் தேவனை மகிமைப்படுத்துகிறவர்களுக்கும், விசேஷித்த ஒளியும், ஆரோக்கியமும், பலனும் தூதர்களால் அருளப்பட்டது. 2T. 704-705. CCh 106.2

பரலோக கட்டளைக்கு முற்றுமாக இணங்கி நடக்கிறவர்களூக்கு ஆவிக்குரிய ஆசிர்வாதங்கள் மட்டுமல்லாது இம்மைக்குரிய ஆசிர்வாதங்களும் பலிதமாகும். P.K. 546. CCh 106.3

“இப்படிச் செய்கிற மனுஷனும் இதைப்பற்றியக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்த குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையை காத்துக் கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான். கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்குற அந்நிய புத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்கு கொண்டு வந்து, என் ஜெப வீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன் ஏசா.56:2,6,7-----G.C.451. CCh 106.4

வானமும் பூமியும் நிலைநிற்குமளவும் சிருஷ்டிகரின் வல்லமைக்கு அடையாளமான ஓய்வுநாளும் நிலைத்திருக்கும். பூமியில் மீண்டும் ஏதேன் ஸ்தாபிக்கப்படும்போது, சூரியனுக்கு கீழேயுள்ள அனைவராலும் கடவுளூடைய பரிசுத்த நாள் கனப்படுத்தப்படும். ஓய்வுநாள் தோறும் மகிமையாக்கப்பட்ட புதிய பூமியின் மக்கள் எனக்கு முன்பாக தொழுது கொள்ளுவார்கள் என்று கர்த்த்ர் சொல்லுகிறார். ஏசா.66:23.-------D.A.283. CCh 107.1