Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

அத்தியாயம்-9

கிறிஸ்துவிலும் சகோதர அன்பிலும் இணைக்கப்படுதல்

தம் பிள்ளைகள் ஐக்கியமாய் வழவேண்டுமென்பது கடவுள் நோக்கம். ஒரே பரலோகத்தில் ஒரும்த்து வாழ அவர்கள் எதிர்நோக்கவில்லையா? கிறிஸ்து தமக்குத் தாமே பிரிந்திருக்கிறரா? தம் ஜனங்கள் குறை பேசுதலும், பிரிவினைகளுமாகிய குப்பைகளை நீக்கி சுத்தி செய்யுமுன் அவர்களுக்கு சித்தியருளுவாரா? தம் ஊழியர்கள் ஒரே நோக்கத்துடன் தங்கள் இருதயம், மனம், பலம் யாவையும் தத்தஞ்செய்து தேவனுடைய பரிசுத்த பார்வையில் ஊழியஞ்செய்யாவிடில் சித்தியருளுவாரா? ஐக்கியமே பலம், பிளவோ பலவீனம். ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டு, மனிதர் இரட்சிப்புக்கக ஏக மனதுடன் உழைக்கும்போது, நாம் தேவனோடு உடன் ஊழியர்களாகிறோம். ஏகோபித்து உழைக்க மறுக்கும் போது நாம் தேவனை கனவீனம் பண்ணுகிறோம். ஒருவரோடொருவர் முரண்பட்டி உழைப்பது ஆத்தும சத்துருவுக்கு சந்தோஷம். அப்படிப்பட்டவர்கள் சகோதர அன்பையும், இருதய உருக்கத்தையும் அப்பியாசிக்க வேண்டும். பிற்காலத்தைக் காட்டும் திரையை நீக்கி, தங்கள் ஐக்கியமின்மையின் பயனைக் காணக் கூடுமானால், அவர்கள் நிச்சயமாகவே மனஸ்தாபப்பட ஏவப்படுவார்கள். 8T. 240. CCh 163.1