Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

பரலோக சபையுடன் ஐக்யப்பட்டிருத்தல்

கீழே யிருக்கும் தேவ சபை மேலேயிருக்கும் தேவ சபையோடு ஒன்றாயிருக்கிறது. உலகிலுள்ள விசுவாசிகளும் விழுந்தபோகாத பரலோக வாசிகளும் ஒரே சபையில் அங்கங்களாயிருக்கிறார்கள். பரலோக வாசிகள் ஒவ்வொருவரும் பூமியில் தேவனைத் தொழுதுகொள்ளும் பரிசுத்தவான்களின் கூட்டத்தை ஆவலோடு உற்று நோக்குகிறார்கள். பூமியின் வெளிப் பிராகாரங்களில் கிறிஸ்துவுக்காக கொடுக்கப்படும் சாட்சிகளை பரலோகத்தின் உட்பிராகாரத்திலிருந்து அவர்கள் கவனித்துக் கேட்கிறார்கள்; கீழேயிருந்து ஏரெடுக்கப்படும் துதி ஸ்தோத்திரங்களோடு பரலோக கீதங்கள் இணைக்கப்பட்டு, விழுந்து போன ஆதாமின் மக்களுக்காக கிறிஸ்துமரித்தது அவமாகவில்லை என்ற பேர் ஆரவார மகிழ்ச்சியின் தொனி பரத்திலுண்டாகிறது. தூதர்கள் நீரூற்றின் மூல ஸ்தானத்திலிருந்து பருகும்போது, பூலோகத்திலுள்ள பரி சுத்தவான்கள் நமது தேவனுடைய நகரத்தைச் சந்தோஷிப்பிக்கும் தேவ ஆசனத்திலிருந்து புறப்பட்டு வரும் நதியின் நீரைப் பருகுவார்கள். CCh 195.2

ஆ, பரலோகம் பூலோகத்துக்கு எவ்வளவு சமீபமாயிருக்கிற தென்பதை நாம் உணரக்கூடுமானால் எத்தனை நலமாயிருக்கும்! பூலோகப் பிறவிகளான குழந்தைகள் ஒன்றும் அறியாதிருக்கும்போதே, ஒளியின் தூதர்கள் அவர்கள் நண்பர்களாயிருக்கிறார்கள். உயிருள்ள ஒவ்வொரு ஆத்துமாவையும் காத்து அதைக் கிறிஸ்து வண்டை வழி நடத்தும்படி மவுன சாட்சி ஒருவர் முயலுகிறார். நம்பிக்கையிருக்கு மளவும், மனிதர் தங்கள் நித்திய அழிவுக்கேதுவாக பரிசுத்த ஆவியானவரைத் தடுக்கும் காலமட்டும். அவர்கள் பரம தூர்களால் காக்கப்படுகிறார்கள். பூமியில் கூடும் பரிசுத்தவான்கள் சபையாவிலும் தேவதூதர்கள் நின்று சாட்சிகளையும், கீதங்களையும் ஜெபங்களையும் கவனித்துக் கேட்கிறார்கள் என்பதை நினைத்துக் கொள்ளுவோமாக. நம் துதிகளைத் தேவதூதர்கள் தங்கள் பாடல்களோடு தேவனுக்கு ஏறெடுக்கிறார்கள். CCh 196.1

நீங்கள் ஓய்வுநாள்தோறும் கூடும்போது இருளிலிருந்து உங்களை ஆச்சரியமான ஒளிக்கு அழைத்தவருக்கு துதிகளைப் பாடுங்கள். “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவிய” அவருக்கு நம் இருதயத் துதியைச் செலுத்துங்கள். கிறிஸ்துவின் அன்பே பேசுகிறவரின் பாரமாயிருப்பதாக. ஒவ்வொரு துதியின் கீதத்திலும் அது எளிய நடையில் வெளிப்படுவதாக. தேவ ஆவியின் ஏவுதல் உங்கள் ஜெபங்களை நடத்தட்டும். ஜீவ வசனம் பேசப்படுகையில் பரலோகத்திலிருந்து தூது கிடைப்பபதாக. உங்கள் இருதயம் சாட்சிபகரவேண்டும். CCh 196.2

தேவ ஆலயத்தில் நாம் கூடும்போது பூரண அன்பின் சுபாவங்களை நாம் பண்படுத்தவேண்டுமென்று தேவன் கற்பிக் கிறார். இது தம்மை நேசிப்போருக்கு அவர் ஆயத்தம் பண்ணப்போயிருக்கும் பரம வாசஸ்தலங்களுக்கு பூலோக வாசிகளைப் பாத்திரராக்கும். அங்கே அவர்கள் ஓய்வுநாள்தோறும் அமாவாசைதோறும் கூடி, மாபெருந் தொனியாய் சிம் மாசனத்திலிருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக துதியும், புகழ்ச்சியும் ஏறெடுப்பார்கள். 6T. 366-368. CCh 196.3