Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

சபைச் சொத்து

ஒரு பட்டணத்திலோ அல்லது நகரத்திலோ ஒரு வாஞ்சை எழும்பும்போது, அவ்வாஞ்சை பேணி வளர்க்கப்பட வேண்டும். துன்மார்க்க இருளின் மத்தியில் ஒரு தீபமாவும், தேவனுடைய ஓய்வுநாளுக்கு ஒரு ஞாபக சின்னமாகவும், தொழுது கொள்வதற்கென ஒரு தாழ்மையான ஆராதனை ஸ்தலம் அங்கு ஓர் அடையாளமாக நிலை நாட்டப்படுமளவும், அவ்விடங்களில் தீர்க்கமாக வேலை செய்யப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஞாபக சின்னங்கள், சத்தியத்துக்குச் சாட்சிகளாக அநேக இடங்களில் நிற்க வேண்டும். 6T. 100. CCh 209.2

சபையைப் பற்றிய காரியங்கள் ஒழுங்கற்ற நிலைமையில் விடப்படக் கூடாது. தேவனுடைய வேலைக்காக சொத்துக்கள் வாங்கும்படி தகுந்த முயற்சிகள் செய்யப்ப்ட வேண்டும். வேலையின் முன்னேற்றம் தடைபடாதபடிக்கும், தேவனுடைய ஊழியத்திற்குக் கொடுக்க விரும்புவோரின் பணம் சத்துருவின் கைக்குள் செல்லவிடாதபடியும் சபைக்குச் சொத்து வாங்க தகுந்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். CCh 210.1

தேவனுடைய ஜனங்கள் ஞானமாய் நடந்துகொள்ள வேண்டுமெனக் கண்டேன். சபையின் நிர்வாகங்கள் ஸ்திரமான நிலையில் இருக்கும்படிச் செய்ய எந்தக் கடமையையும் அவர்கள் நழுவவிடக்கூடாது. தங்களால் கூடிய யாவையும் செய்தபின், தேவனுடைய மீதியான ஜனங்களின் வாய்ப்பைச் சாத்தான் தனக்கு அனுகூலமாக ஆக்கிக்கொள்ளாதபடிக்கும், கர்த்தர் இவைகளைத் தங்களுக்காக நன்மையாக மேற்கொள்ளூம்படி அவரை நம்ப வேண்டும். சாத்தான் கிரியை செய்யுங்காலம் இதுவே. கொந்தளிப்பான காலம் நம் முன் இருக்கின்றது; அவனுடைய திட்டங்களுக்கு எதிர்த்து பத்திரமாய் நிலைநிற்கும்படி, சபை எழும்பி முன்னேறிச் செல்ல வேண்டும். செய்ய வேண்டியதைச் செய்வதற்குக் காலம் இதுவே. அவருடைய ஜனங்கள் சபைக் காரியங்களை தளர்ச்சியாக விடுவதையும், சத்துரு தனக்கு இஷ்டமான பிரகாரம் காரியங்களை நடத்த, சந்தர்ப்பம் முழுவதையும் அவன் வைத்துக்கொள்ள இடம் கொடுப்பதையும் தேவன் விரும்புவதில்லை. 1T. 210,211. CCh 210.2