Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

பொருளடக்கம்

இளம் வயதில் இறையருளைப் பெற்றதினால்
எண்ணில்லா தரிசனங்கள் கண்டவராம்
வளமில்லாக் குடும்பத்தில் வாழ்ந்திடினும்
வறுமையிலும் செம்மையினைக் கொண்டவராம்!

அருளொளியால் இவர்யாத்த நூல்களெல்லாம்
அவனியில் அணையாத விளக்காய் நின்று
மருளிருளில் மயங்கிவாழும் மக்களுக்கு
மகிமை மிகு ஒளியாக இலங்கிநிற்கும்!

“அம்மையார்” என்று தமிழ் உலகினிலே
அட்வெந்து மக்களாலே அழைக்கப்படும்
செம்மைமிகும் சிறப்புகள் உரையவராம்
சிறப்பான நூல்கள்பல தந்தவராம்!

எத்தனையோ சிறப்புகள் உண்டிவர்க்கு
எடுத்துரைத்தல் எளிதல்ல எந்தனுக்கு!
முத்தனைய பெயருக்கு உரியவராம்
மூதாட்டியாய் வாழ்ந்த எலன் ஜி. ஒயிட்! - பாஸ்டர் இரா. ஆல்பர்ட் சகரியா
 Mar viii.1