Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

அத்தியாயம் 24 - இரண்டாம் துதனின் துது

முதலாம் தூதனின் தூதை ஏற்றுக்கொள்ளாததாலும், பரலோகத்திலிருந்து வந்த ஒளியை மறுத்ததாலும், திருச்சபைகள், தேவனின் தயவிலிருந்து விழுந்துப்போயின. தங்களுடைய பலத்தின் மீது சாய்ந்தபடியால், முதலாம் தூதனின் தூதை எதிர்த்தார்கள். ஆகையால், இரண்டாம் தூதனின் தூதைக்குறித்த வெளிச்சம் அவர்களுக்கு கிட்டாமல் போயிற்று. ஆனால், சபைகளினால் வாதிக்கப்பட்ட தேவனுக்கு பிரியமானவர்கள், “பாபிலோன் விழுந்தது” என்கிற செய்திக்கு தலைவணங்கி, சபைகளிலிருந்து வெளியேறினார்கள். GCt 67.1

இரண்டாம் தூதனின் தூதின் முடிவிலே, தேவ ஜனங்களின் மீது பரலோகத்தின் ஒளி பிரகாசித்ததை நான் கண்டேன். இவ்வொளியின் கதிர்கள் சூரியனைப் போல பிரகாசமாயிருந்தது. தேவதூதர்கள், “இதோ, மணவாளன் வருகிறார். அவரை சந்திக்க புறப்பட்டுப் போங்கள்.” என்று கூறுவதை நான் கேட்டேன். GCt 67.2

இரண்டாம் தூதனின் செய்திக்கு வலிமைச்சேர்க்கத்தான் இந்த நள்ளிரவு சத்தம் கொடுக்கப்பட்டது. சோர்ந்துப்போயிருந்த பரிசுத்தவான்களை உற்சாகப்படுத்தி, ஊழியத்தை செய்யும்படியாக ஏவுவதற்காக பரலோகத்திலிருந்து தூதர்கள் அனுப்பப்பட்டனர். இச்செய்தியை ஏற்பதில் தாலந்து மிகுந்தோர் முதன்மை வகிக்கவில்லை. பக்தி நிறைந்த தாழ்மையானவர்களிடம் தூதர்கள், “இதோ மணவாளன் வருகிறார். அவரை சந்திக்க புறப்படுங்கள்” என்கிற தூதை கொடுத்தார்கள். இவர்கள், பரிசுத்த ஆவியின் பெலத்தினால் மிக துரிதமாக இச்செய்தியை ஊரெங்கும் பரப்பினார்கள். இது, சோர்ந்த விசுவாசிகள் அநேகரை எழுப்பி GCt 67.3

விட்டது. இந்த செய்தி, மனித அறிவின் மீது நில்லாதபடி, தேவனின் வல்லமையில் நின்றபடியால், இதனை கேட்ட யாதொரு பரிசுத்தவானாலும் இதனை மறுக்க இயலவில்லை. ஆவியில் அனலடைந்திருந்தவர்கள் இச்செய்தியை முதலாவதாக ஏற்றுக்கொண்டார்கள். மற்றவர்கள் சற்று தாமதமாக ஏற்று, இச்செய்தியை பரப்புவதில் சேர்ந்துக்கொண்டார்கள். GCt 68.1

பூமியின் அனைத்து பாகங்களிலும் ஆயிரக் கணக்கானோர் மத்தியில் இரண்டாம் தூதனின் தூதின் மீது வெளிச்சம் காட்டப்பட்டது. காத்துக்கொண்டிருந்த தேவஜனங்கள் யாவரும் எழுப்புதல் அடையும் அளவுக்கு இச்செய்தி பரவியது. திருச்சபைகளில் இத்தூது பிரவேசிப்பதை அநேகர் தடுத்தார்கள். எனவே, உயிருள்ள சாட்சியைப் பெற்றிருந்த அநேகர் திருச்சபைகளிலிருந்து வெளியேறினார்கள். நள்ளிரவு கூக்குரலினால் மகத்தான ஊழியம் ஒன்று செய்யப்பட்டாகிவிட்டது. இந்த தூது, இருதயங்களை ஊடுருவக்கூடியதாக இருந்தப்படியால், விசுவாசிகள் யாவரும் அதற்கு கட்டுப்பட்டு வாழ முடிவு செய்தார்கள். ஒருவர் மீது ஒருவராக சாய்ந்துக்கொள்ள இயலாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். GCt 68.2

நீதிமான்கள், தங்களுடைய தேவனின் வருகைக்காக உபவாசத்தோடும், ஜெபத்தோடும் காத்திருந்தார்கள். சில பாவிகளும் இச்சம்பவத்தை பயத்தோடு எதிர்நோக்கியிருந்தார்கள். ஆகிலும், பெரும்பாண்மையானோர் இதனை எதிர்த்து, சாத்தானின் ஆவியைக் காட்டினார்கள். அவர்கள் எழுப்பிய கேலியும், நிந்தையும் எல்லா இடங்களிலும் கேட்டது. அவர் வரும் நாளையாவது நாழிகையையாவது ஒருவனும் அறியான். பரலோகத்திலிருந்து வரக்கூடிய அனைத்து ஒளிக்கதிர்களையும் தடுத்து, இருதயங்களை கடினப் படுத்தி, ஜனங்களை தங்கள் வசப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சாத்தானின் தூதர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். உண்மையான பங்கில்லாமல், அநேகர், கர்த்தருக்காக காத்திருப்பதாகக் கூறி வந்தார்கள். அவர்கள் கண்டிருந்த தேவமகிமையும், பரிசுத்தவான்களின் தாழ்மையும், இருந்த சாட்சியங்களின் வலுவும், சத்தியத்தை ஏற்றுக்கொள்வதாக கூற வைத்தது. ஆனால், அவர்கள் மனந்திரும்பவில்லை. அவர்கள் ஆயத்தமாகவில்லை. பரிசுத்தவான்கள் ஜெப சிந்தை யோடிருந்தார்கள். ஒரு வகையான பரிசுத்தமான பக்தி அவர்களினுள் குடியிருந்தது. தேவதூதர்கள், இச்சம்பவங்களின் முடிவு எப்படி இருக்குமோ என்பதை பார்ப்பதற்கு ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள். பரலோக சத்தியத்தை ஏற்று, உலக ஐசுவரியங்களிலிருந்து விலகி, இரட்சிப்பின் நீரூற்றிலிருந்து பெலனடையவேண்டும் என்று காத்திருந்தவர்களை தூதர்கள் பெலப்படுத்தினார்கள். அவர்கள் இயேசுவோடும் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். இயேசுவின் சாயல் அவர்களில் பிரதிபலித்தது. முழுமையாக தத்தம் செய்து, தங்களை வெறுமையாக்கி கொண்டவர்கள், சாவாமையை போர்த்திக்கொள்ள வேண்டும் என்று ஆசித்தார்கள். மறுபடியுமாக அவர்கள் வருத்தத்தோடு ஏமாறவேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. விடுதலை கிடைத்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்த காலம் கடந்து போயிற்று, அவர்கள் இன்னமும் பூமியில் தான் இருந்தார்கள். தங்களுடைய பிரியத்தை பரலோகத்தின் மீது வைத்திருந்தபடியால், மனதிலே சாவாமையின் விடுதலையை ருசித்திருந்தார்கள். ஆகிலும், அவர்கள் நம்பிக்கை நிறைவேறவில்லை. GCt 68.3

அநேகரின் மனதில் குடியிருந்த அச்சம் உடனடியாக மறையவில்லை. இருப்பினும், தேவனின் கோபாக்கினையை அவர்கள் கண்கூடாக காணாததால், தங்கள் அச்சத்திலிருந்து வெளிவந்து, மறுபடியும் தங்கள் கேலியையும், நிந்தைகளையும், பரியாசங்களையும் தொடர ஆரம்பித்தார்கள். தேவ ஜனங்கள் மறுபடியுமாக சோதிக்கப்பட்டார்கள். உலகம் அவர்களை கேலி செய்தது. இயேசு மறுபடியும் வருவார் என்றும், மரித்தோரை எழுப்புவார் என்றும், ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பார் என்றும் விசுவாசித்த பிள்ளைகள் இயேசுவின் சீடர்களைப் போல, ” என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை ” என எண்ணினார்கள். GCt 69.1

பார்க்க : மத்தேயு 24 : 36 ; 25 : 6
யோவான் 20 : 13
வெளிப்படுத்தல் 14 : 8