Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

8 - புதைந்திருக்கிற பொக்கிஷம்

“பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.” மத்தேயு 13:44. COLTam 99.1

பண்டையக் காலங்களில் பொக்கிஷங்களை நிலத்திற்குள் புதைத்துவைப்பது வழக்கம். திருடு, கொள்ளை அதிகமாகக் காணப்பட்டது. ஆட்சி ஆதிகாரம் மாறுகிற சமயங்களிலெல்லாம், பெரும் செல்வந்வீர்ர்கள் புகுந்து, சூரையாடுகிற அபாயமும் அந்நாட்டில் எப்போதும் காணப்பட்டது. அதனால் தான், செல் வந்தர்கள் தங்கள் உடைமைகளை மறைத்து வைத்துப் பாதுகாக்க முயன்றனர். நிலத்திற்குள் புதைப்பதே பாதுகாப்பானதெனக் கருதினார்கள். பெரும்பாலும் புதைத்த இடம் மறக்கப்பட்டுப் போகும்; புதைத்தவர் மரிக்கலாம்; கைது நடவடிக்கை அல்லது நாடு கடத்துதலுக்கு ஆளாகி புதையலை விட்டுப் பிரியலாம்; எனவே பெரும்பாடுகளுக்கு மத்தியில் அவர் மறைத்த அந்தப் பொக்கிஷம், யார் கையில் கிடைக் கிறதோ அவர் அதிர்ஷ்டசா லிதான். புறக்கணிக்கப்பட்ட நிலங்களில் பழைய நாணயங்களையும், பொன் மற்றும் வெள்ளி ஆபரணங்களையும் கண்டெடுப்பது கிறிஸ்துவின் நாட்களில் அரிய ஒரு விஷயமாக இருக்கவில்லை . COLTam 99.2

விவசாயம் செய்வதற்காக ஒருவன் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுக்கிறான்; ஏர்பூட்டி உழுகிறபோது, நிலத்தில் புதைக்கப் பட்ட பொக்கிஷம் வெளிப்படுகிறது. பொக்கிஷத்தைக் கண்ட உடனே ஒரு நல்ல வாய்ப்பு தனக்கு எட்டியிருப்பதைப் புரிந்து கொள்கிறான். கண்டெடுத்த பொன்னை அந்த மறைவிடத்திலேயே வைத்துவிட்டு, தன் வீட்டிற்கு திரும்பிச்சென்றதும், அந்தப் பொக்கிஷமுடைய நிலத்தை விலைக்கு வாங்கும்படி தனக்குண்டான எல்லாவற்றையும் விற்கிறான். அவன் ஒரு பைத்தியக்காரனைப் போலச் செயல்படு வதாக அவனுடைய குடும்பத்தாரும் அயலகத்தாரும் நினைக் கிறார்கள். அந்த வயலைப் பார்க்கும் போது, அந்த தரிசு நிலம் ஒன்றுக்கும் உதவா தன எண்ணுகிறார்கள். ஆனால் அவன் செய் வதறிந்துதான் செயல்படுகிறான்; அந்த நிலத்தின் உரிமையாளனான பிறகு, தான் பார்த்திருந்த பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்க, ஓர் இடம் விடாமல் அங்கு தேடுகிறான். COLTam 100.1

பரலோகப் பொக்கிஷத்தின் மதிப்பையும், அதைப் பெற்றுக் கொள்ள எடுக்கவேண்டிய முயற்சியையும் இந்த உவமை கூறுகிறது. அந்த நிலத்தில் அந்தப் பொக்கிஷத்தைக் கண்டு பிடித்தவன், புதைந்திருந்த ஐசுவரியங்களைப் பெறும்படி, தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்பதற்கும், கடினமாக உழைப்பதற்கும் ஆயத்தமாக இருந்தான். அதுபோலவே, பரலோகப்பொக்கிஷத்தை கண்டுபிடிக்கிறவன், சத்தியத்தின் ஐசுவரியங்களைச் சொந்தமாக்க, எப்படிப்பட்ட பிரயாசத்தையும், எவ்வளவு பெரிய தியாகத்தையும் பொருட்படுத்தமாட் டான். COLTam 100.2

உவமையில், பொக்கிஷமிருந்த நிலமானது, பரிசுத்த வேதவாக்கியங்களைக் குறிக்கிறது. சுவிசேஷம்தான் பொக்கிஷம். தேவ வார்த்தையில் காணப்படுமளவிற்கு இந்தப் பூமிக்குள் தானே தங்கப்படிவங்கள் படிந்திருக்கவில்லை; விலையுயர்ந்த பொருட்கள் நிறைந்திருக்கவில்லை. COLTam 100.3