Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

24—வெற்றிகரமான கிறிஸ்தவச் சேவைக்கான தகுதிகள்

செயல்திறன்

சோம்பேறித்தனமும் திறனின்மையும் பக்தி அல்ல. நாம் தேவனுக்காக ஊழியம் செய்கிறோம் என்கிற எண்ணமிருந்தால், ஆவிக்குரிய சேவை பரிசுத்தமானது என்று முன்பைவிட அதிகமாக உணருவோம். இந்த உணர்வுதான் நம் ஒவ்வொரு கடமையையும் நாம் செய்வதற்கு ஜீவனும் விழிப்பும் விடாமுயற்சியோடு செயல்படுகிற ஆற்றலும் கொடுக்கும். 19T, 150 TamChS 291.1

இக்காலகட்டத்தில் அதிகபட்ச திறமையும் அதிக ஆழமான அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. ஓ, இந்த எண்ணமே முழுவதும் என்னில் நிறைந்துள்ளதால் நான் தேவனை நோக்கி, “பாவத்திற்கெல்லாம் அடிப்படையான சுயவிக்கிரகாராதனையை தங்கள் இருதயங்களில் சிலுவையில் அறைந்த தூதுவர்கள் வேண்டும். தங்கள் கடமை குறித்த உணர்வால் நிறைந்த அப்படிப்பட்ட தூதுவர்களை எழும்பச்செய்து அனுப்புங்கள்” என்று கதறுகிறேன். 29T,27 TamChS 291.2

சீடர்களிடம் அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஊழியத்தைச் செய்வதற்கு மிகுந்த செயல்திறன் அவசியம்; ஏனெனில், தீமையின் அலை அவர்களுக்கு எதிராக மிகுந்த ஆற்றலோடும் பெலத்தோடும் வீசுகிறது.” 1 AA, 31  TamChS 292.1