Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

இந்தநூலை எழுதியவரின் எண்ணம் என்ன?

இந்தப் புத்தகமானது மக்கள் அனைவரும் வாசிக்கப்படும் அளவிற்கு அவர்கள் முன்பாகக் கொண்டுவரப்படவேண்டும்! GCTam .0

வெள்ளியைவிட- பொன்னைவிட நான் அதிகமாகப் பாராட்டுவது இந்த “மாபெரும் ஆன்மீகப் பேராட்டம்” புத்தகத்தைத்தான்! GCTam .0

இந்தப் புத்தகம், நிகழவிருக்கும் (நிகழ்ந்துகொண்டிருக்கும்) மாபெரும் ஆன்மீகப் போராட்டத்தின் சம்பவங்களை முன்னதாகவே எ(தீர்க்கதரிசனமாக) நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது! (GC 11) GCTam .0

இந்தப் புத்தகத்தின் வாயிலாக ஆண்டவர் தமது மக்களிடம் பேசுகிறார்! (GC 129) GCTam .0

இந்த நூலில் சரித்திரச் சம்பவங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன! (GC 11-12) GCTam .0

இந்த நூலின்மூலமாக ஆண்டவருடைய மக்களுக்குத்தேவையான வெளிச்சம் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது! (CM 123—130). GCTam .0

இந்தப் புத்தகத்தை நான் எழுதிக்கொண்டிருந்த வேளைகளில் தூதர்களுடைய நேரடிப்பிரசன்னம் எனக்குக் கிடைத்தது!(CM128). GCTam .0

இந்த நூல் எந்த அளவிற்கு அதிகமாக மக்களால் அறியப்பட்ட நூலாக இருக்குமோ அந்தஅளவிற்கு ஞாயிறு ஆசரிப்பு இயக்கத்திற்கு எதிரான பலத்த அரணாக இருக்கும்! (CM 123). GCTam .0

இந்த நூல் அதிகமாக விற்கப்படுமானால், பொல்லாத மனிதர்களின் ஏமாற்றறுச் செயல்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுவிடும்! (CM 129). GCTam .0

இந்த நூல் ஆவியானவரின் ஒளிப்படுத்தலினால் வெளிப்படுத்தப்பட்டு எழுதப்பட்டது! (CM 127). GCTam .0

-எலன் ஜி. உவைட் 

“பாவத்தால் விழுந்துபோன இந்த உலகம் இப்பொழுது நடைபெறுகின்ற மாபெரும் ஆன்மீகப் போராட்டத்திற்கான யுத்தக் களமாக இருப்பதை பரலோகத்தினுடைய— பூலோகத்தினுடைய வல்லமைகள் அனைத்தும் சாட்சியிட்டுக்கொண்டிருக்கின்றன! GCTam .0

நன்மைக்கும் தீமைக்கும், பரத்திற்கும் பாதாளத்திற்கும் நடைபெறுகின்ற இந்த மகத்தான போராட்டத்திற்கு இந்தப் பூவுலகம் ஒரு காட்சியரங்கமாக இருக்கும்படி ஏற்படுத்தப் பட்டுள்ளது! GCTam .0

மனுக்குலத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் இந்த மாபெரும் ஆன்மீகப் போராட்டத்தில் தங்களது பங்கினைச் செய்தே தீரவேண்டும்! GCTam .0

எந்த ஒரு நபரும் இந்தப் பேராட்டத்தில் நான் நடுநிலை கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் இடத்தில் இருக்கவே முடியாது!” GCTam .0

-எலன் உவைட்
“அவரையே உயர்த்துங்கள்” பக்கம்: 253.